படப்பையை அடுத்த சிறுவஞ்சூர் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் திருக்கோயில் சிதிலமடைந்து வருகிறது. இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரிலிருந்து இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. இக்கோவில் முழுவதும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னால் கருங்கற்களால் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குழந்தை பேறு தரும் தலமாக விளங்கி வந்துள்ளது. இக்கோவில் கடந்த 50 ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் பூஜைகள் இல்லாமல் தற்போது சிவனடியார்களின் முயற்சியால் ஒருகால பூஜை நடைபெற்று வருகிறது.. இக்கோயிலை சீரமைக்க வேண்டி இந்து சமய அறநிலைதுறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கிராம பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– சிவபெருமான்.காம்

https://maps.app.goo.gl/LmwfNKkvhH7exkd66