உருத்திரபசுபதி நாயனார்

சோழ நாட்டில் திருத்தலையூர் என்னம் ஊரில் வேதியர் குலத்தில் தோன்றியவர் உருத்திரபசுபதி நாயனார். இவர் தாமரை மலர்கள் பூத்த தடாகத்திலே கழுத்தளவு நீரில் நின்று கொண்டு சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றி திருவைந்தெழுத்தையும் திருவுருத்திரத்தையும் இரவும் பகலும் வழுவாமல் செபித்து வழிபடுதலைத் தமது வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தகைய மந்திர வழிபாட்டின் பயனாகச் சிவபெருமான் திருவருளுக்கு உரியவராய்ச் சிவலோகத்தை அடைந்து பேரின்பம் பெற்றார்

திருச்சிற்றம்பலம்