சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் முற்றிலும் சிதிலமாகி, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது அரையப்பாக்கம் எனும் கிராமத்தில். மூலவர் ஸ்ரீ அருணாதீஸ்வரர் எனும் நாமம் கொண்டு கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். அம்பாள் ஸ்ரீ அருணாம்பிகை சன்னதி தென் திசை நோக்கி உள்ளது. மகாமண்டபத்தில் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ முருகன் சன்னதிகள் இருபுறமும் அமைந்துள்ளன. மற்ற சன்னதிகள் பஞ்ச கோஷ்ட மூர்த்திகள், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஸ்ரீஜேஷ்டா  தேவி மற்றும் நவக்கிரகம். ஒரு காலம் பூஜை நடைபெறுகிறது. தல விருட்சம் வில்வம். மதுராந்தகம்-திருக்கழுக்குன்றம் பேருந்தில் இக்கிராமத்தை அடையலாம்…