கணம்புல்ல நாயனார்

வடவெள்ளாற்றின் தென்கரையில் உள்ள இருக்குவேளூரில் கணம்புல்லர் பிறந்தார். நிறைந்த செல்வம் உடையவர். நற்குண சீலர். ஈசன் திருவடி ஒன்றே மெய்ப்பொருள் என அன்பு செய்தவர். திருக்கோவில் உள்ளே விளக்கு எரிந்து ஒளியூட்டுதல் சிறந்த பணி என நினைத்தார். எனவே கோவிலில் விளக்கிட்டு பாடி வழிபட்டு வந்தார்.

வறுமை அவரை வாட்டியது. தில்லைசென்று ஆடலரசை பலகாலம் வழிபட்டு வந்தார். வீட்டில் உள்ள பொருள்களை யெல்லாம் விற்று திருப்புலீச்சுவரம் கோவிலில் விளக்கு ஏற்றி வந்தார். விற்பதற்கு அவரிடம் ஒரு பொருளும் இல்லை. அயலாரிடம் சென்று இரஞ்சுவதற்கு அஞ்சினார். உடல் உழைப்பால் அரிந்த கணம் புல்லைக் கொண்டுவந்து விற்று அதனால் கிடைக்கும் பெருளால் நெய்வாங்கி விளக்கிட்டுத் தொண்டு செய்தார்.

ஒருநாள் அரிந்து கொண்டு வரும் கணம் புல் எங்கும் விற்காமல் அவதிப்பட்டார். அதனால் விளக்கு எரிக்க அந்த புல்லையே திரித்து எரித்தார். தொடர்ந்து எரிக்க புல் இல்லை என்ற நிலையில் அன்புருகும் சிந்தையுடன் அவ்விளக்கில் தன் தலையை வைத்து எரிக்க முயன்றார்.சிவபெருமான் தடுத்து அருள் புரிந்து சிவலோகப் பதவிதந்தார்.

திருச்சிற்றம்பலம்