பரமனையே பாடுவார்

முப்புரங்களை எரித்தவரும், பாம்புகளை ஆபணரமாக அணிந்தவரும், இணையற்ற பரம்பொருளாய் விளங்குபவரும், உலகமனைத்தையும் தமது மாய சத்தியால் உருவாக்கியவரும், கரணங்களால் காணப்படாதவராயினும் உலகில் நிறைந்து காட்டுபவருமாகிய சிவபெருமானையே பாடுபவர்கள் பரமனையே பாடுவார் ஆவார்.

தமிழ் மொழி, வடமொழி, பிரதேசமொழி இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கற்று பிரம்மனும், விஷ்ணுவும் காணப் பெறாத சிவபெருமானை மெய்பொருளாக் கொண்டு, இயல் இசைப் பாடல்களை மெய்யுணர்வுடன் மனமுருகிப் பாடுவார்கள். இடைவிடாது பரமனையே சிந்திப்பார்கள். இவர்களே பரமனையே பாடுவார் என்னும் மெய்யடியார் ஆவார்.

திருச்சிற்றம்பலம்