கோச்செங்கட்சோழநாயனார்

இறைவன் எனக்கு மட்டுமே உரியவன் என்னும் எண்ணம் மனிதர்களைத் தாண்டி சிவகணங்களுக்கும் இருந்தது.புஷ்பதத்தன், மாலியவான் இரு வர்களுக்குள்ளும் சிவனின் பக்தியில் தான் தான் பெரியவன் என்னும் வாக்குவாதம் இருக்கும்.எப்போதும் சச்சரவாக இருக்கும் இவர்கள் இரு வருக்கும் ஒருநாள் வாக்குவாதம் உச்சமடைந்து ஒருவரையொருவர் சபித்துக்கொண்டார்கள்.

புஷ்பதத்தன் மாலியவானை சிலந்தியாகவும், மாலியவான் புஷ்பதத்தனை யானையாகவும் சபித்தார்கள். இருவரும் சோழநாட்டில் வற்றாமல் பாயும் காவிரி ஆற்றின் கரையில் இருக்கும் திருவானைக்காவல் என்னும் இடத்தில் சிலந்தியாகவும், யானையாகவும் பிறந்தார்கள்.கரையின் ஓரமிருந்த நாவல் மரத்தின் கீழ் சிவலிங்கம் ஒன்று இருந்தது.

யானையாக இருந்த புஷ்பதத்தன் தனது முற்பிறவியின் பலனால் தும்பிக்கையில் நீரை நிரப்பி மலரை கொணர்ந்து சிவலிங்கத்துக்கு நீர் அபி ஷேகம் செய்து வழிபட்டு வந்தது. சிலந்தியாக இருந்த மாலியவான் லிங்கம் மீது காய்ந்த இலைகள் விழாமல் இருக்க லிங்கத்தைச் சுற்றி வலை களைப் பின்னியது. மீண்டும் யானை பூஜை செய்ய வரும்போது லிங்கத்தின் மீது சிலந்தி பின்னியிருக்கும் வலையை களைந்து பூஜை செய் வதும், அதன் பிறகு வரும் சிலந்தி தன் வலையை காணாமல் வருந்தி மீண்டும் பின்னுவதும் வழக்கமாயிற்று.

யார் இதை செய்வது என்று கண்டறிய நினைத்த சிலந்தி மறுநாள் மரத்தின் பின்பு ஒளிந்து யானை களைவதை கண்டது.யானையை கொல்லாமல் விடுவதில்லை என்று யானையின் தும்பிக்கையில் நுழைந்து யானையைக் கடிக்க, யானை வலிதாங்காமல் தும்பிக்கையை நிலத்தில் அடித்தது. இதில் சிலந்தி யானை இரண்டுமே இறைந்துவிட்டது. யானை குற்றம் புரியாததால் சிவனிடமும், சிலந்தி யானையைக் கொல்ல நினைத்ததால் மனிதபிறவியாக எடுக்க நேரிட்டது. சிவனை வணங்கியதால் அரச குலத்தில் பிறந்தது.

குழந்தைசெல்வம் இல்லாத சோழம ன்னனான சுபதேவரருக்கும், கமலவதி அரசிக்கும்  மகனாகப் பிறந்த மாலியவானை கோச்செங்கட்சோழர் என்னும் பெயரிட்டு அன்புடன் வளர்த்துவந்தார்கள். இவர் பிறக்கும் போது ஜொதிடர் ஒருவர் இன்னும் சற்று காலம் தாழ்த்தி இந்தக் குழந்தை பிறந்தால் உலகையே ஆள்வான் என்று சொல்லவே அதைக் கேட்ட அரசியார் சற்று நெரம் வலி தாங்கலாம் என்று அரசனிடம் சொல்லி தலை கீழாக தொங்கினாள்.

ஜோதிடர் குறிப்பிட்ட நேரம் வந்ததும் அழகான ஆண்மகவை பெற்றெடுத்து கொஞ்சினாள். ஆனால் என் கோவே செங்கண்ணா  என்று சொல்லி மகிழ்ந்த சிலநேரத்தில் இயற்கை எழுதினாள்.சுபதேவர் மகனை போர்க்கலையிலும், வீரத்திலும், தீரத்திலும் மகனை சிறப்பாக வளர்த்து தகுந்த வயதில் அவனை அரசனாக முடிசூட்டினார்.

தனது முற்பிறவி பற்றி அறிந்துகொண்ட கோச்செங்கட்சோழர் சிவனின் மீது பக்தி கொண்டு திருவானைக்காவலில் கோயில் எழுப்பினார். பூர்வ ஜென்மத்தில் புஷ்பதத்தன் யானை உருவம் கொண்டு தன் வலையை அழித்ததால் யானை சிவலிங்கத்தை வழிபட முடியாதபடி மாடக் கோவில்க ளைக் கட்டினார். இவர் 70 கோயில்களை மாடக்கோவிலாக கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோச்செங்கட் சோழ நாயனார் தில்லையில் தங்கி தியாகேச பெருமாளை மூன்று வேளையும் வழிபட்டு  இறுதியில் தில்லையம்பனையே சரண டைந்து அவரது பாதங்களை அடைந்தார்; சிவாலயங்கள் மாசிமாதம் சதயம் நட்சத்திரத்தன்று இவருக்கு குருபூஜை செய்யப்படுகிறது.

திருச்சிற்றம்பலம்