63 நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் பெரியபுராணம் என அழைக்கப்படும் நூலின் வேறு பெயர்கள் யாது?
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் பெருமான் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும்.
பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?
அருண்மொழித் தேவர் என்ற சேக்கிழார் பெருமான். (சேக்கிழார் என்பது மரபின் டிபயர்) குன்றத்தூர்
சேக்கிழார் பெருமானின் உடன் தோன்றியவர் பெயர் என்ன?
பெரியபுராணத்தின் ஆசிரியர் சேக்கிழார் ஆவார். இவரது இயற்பெயர் அருண்மொழித் தேவர் என்பதாகும். இளமையில் இந்தப் பெயரிலேயே அழைக்கப்பட்டார். இவரது உடன் பிறந்தார் பாலறாவாயர் என்பவர்.
சேக்கிழார், எந்த மன்னவரின் மந்திரி சபையில் பணியாற்றினார்
இரண்டாம் குலோத்துங்க சோழன் போர்களில் ஈடுபடாமல், கேளிக்கைகளில் மனதினை செலுத்தியதாகவும், மறுமைக்கு துணை புரியக் கூடிய சிவபெருமானின் தொண்டர்கள் வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர் தொகையிலிருந்து சோழ மன்னனுக்கு சேக்கிழார் எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி அவர்களால் பாடல்பெற்ற திருத்தொண்டர் திருவந்தாதியையும் கூறினார். அவற்றைக் கேட்ட சோழ மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்குபடி சேக்கிழாரை வேண்டினான்.
சுந்தரர் வரலாற்றை கயிலையில் கூறிய முனியவர் யார்?
வியாக்கிர பாத முனிவரின் புதல்வர் உபமன்ய முனிவர். (உபமன்ய முனிவர் குழந்தை பருவத்தில் பாலுக்காக அழுத போது பாற்கடலை சிவபெருமான் அருளினார்).
அநபாயசோழன், சேக்கிழார் பெருமானுக்கு வழங்கிய பட்டம் யாது?
சோழமன்னன், திருத்தொண்டர் புராணத்தையும் சேக்கிழா ரையும் யானை மீது ஏற்றி, தானும் அவர்பின் அமர்ந்து, தன் இரு கைகளாலும் வெண் சாமரைக் கவரி வீசிக்கொண்டே, திருவீதியை வலம் வரச் செய்தான். யானை, திருவீதி வலம் வந்து கனகசபையின் முன்னே நின்றது. அடியவர் பலரும் சூழ்ந்து நின்று போற்றினர். சேக்கிழார் யானையிலிருந்து கீழே இறங்கி, திருத்தொண்டர் புராணத் திருமுறையைக் கனகசபையின் முன்னே வைத்தார். மன்னர்பிரான் சேக்கிழாருக்குத் தொண்டர்சீர் பரவுவார் எனத் திருப்பெயர் சூட்டி இறைஞ்சிப் போற்றினான். அன்பர்களும் தொண்டர்சீர் பரவுவாரைத் தொழுது போற்றினர். அநபாய சோழன் திருத்தொண்டர் புராணத் தைச் செப்பேட்டில் எழுதச் செய்து முன்னுள்ள பதினொரு திருமுறைக ளோடு சேர்த்து இந்நூலைப் பன்னிரண்டாம் திருமுறையாக்கிச் சிறப்பித்தான்.
பெரியபுராணத்தின் ஆதார நூல்கள் யாது?
சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றுவதற்கு மூல நூல்களாய் இருந்தவை பலவாகும். தேவாரப் பதிகங்களும், சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திரு அந்தாதியும் பெரியபுராணத்திற்கு முதன்மைத் தரவுகளைத் தந்துள்ளன.
ஆயிரம் சூரியன் ஒளி போன்று பிரகாசித்து கயிலைக்கு சென்ற நாயன்மார் யார்?
பூங்கோயில் என பெயர் பெறும் பதி யாது?
திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.
திருவாரூர் இறைவனின் திருநாமம் யாது?
Please select 3 correct answers
இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது. அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார்.
Share your Results: