சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
02.04.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் செல்லும் சாலையில் ஒரத்தூர் வழியாக சிறுவஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருகோவிலில் 33-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ செந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்

➖➖➖➖➖➖➖➖➖

திருக்கோயில் விவரம்

படப்பையிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் சிறுவஞ்சூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பழமை வாய்ந்த அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத திருவாலீஸ்வரர் திருக்கோயில உள்ளது.  வாலி திருமுல்லைவாயிலிக்கு வழி தெரியவேண்டி இங்கு வழிபாடு செய்ததால் சுவாமியின் திருநாமம் திருவாலீஸ்வரர்.  இக்கோவில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட சுமார் 800 வருடங்கள் பழமையான கோவிலாக  உள்ளது. தற்போது ஒரு கால பூசை நடைபெற்று வருகிறது.

இக்கோயில் தற்பொழுது மிகவும் சிதலமைந்த நிலையில் உள்ளது. ஊர் பொதுமக்ககள் மற்றும் சிவனடியார்களின் முயற்சியினால் விரைவில் திருப்பணி துவங்க உள்ளது.

இந்த கோவிலின் வராலாரோ புராணமோ யாருக்கு சரியாக தெரியவில்லை.  கோவில் வாயிலில் நாகம் சிற்பம் உள்ளது. ராகு அல்லது கேது வழிபட்ட தலமாக இருக்கலாம். துவார பாலகருக்கு பதிலாக நாக சிற்பம் அமைக்கப்பட்டிருக்கலாம்.  இக்கோயில் திருமண பரிகால ஸ்தலாமாக உள்ளது. இக்கோயிலில் வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் அன்று பலன் அடைந்த பக்தர்கள் தெரிவித்தார்கள்.


திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்