சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
07.05.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் அழிசூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் அம்புஜகுஜளாம்பாள் சமேத ஸ்ரீ அருளாலீஸ்வரர் திருகோவிலில் 34-வது உழவாரப்பணி செய்ய திருவருள் கருணை செய்துள்ளது. அதுசமயம் அடியார்கள் உழவாரப்பணியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
– அடியேன் சிவ சேகர்
➖➖➖➖➖➖➖➖➖
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
➖➖➖➖➖➖➖➖➖
கோவில் கூகுள்
https://maps.app.goo.gl/VSeYdRWSuVQvFRcMA
➖➖➖➖➖➖➖➖➖

அழிசூர் அருளாலீசுவரர் கோயில்
தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில்
உத்திரமேரூர் அருகில் 6 கிமீ தொலைவில் அழிசூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. அழிஞ்சல் மரத்தடியில் அகத்தியர் இறைவனை வழிபட்டதால் இவ்விடம் அழிசூர் என்றழைக்கப்படுகிறது. செய்யாறு நதியின் தென் கரையில் இவ்வூர் உள்ளது.

இக்கோயிலின் மூலவராக அருளாலீசுவரர் உள்ளார். இங்குள்ள இறைவி அம்புஜ குசலாம்பாள் ஆவார். இறைவி அபய முத்திரையுடன் காணப்படுகிறார். சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது. கல் தூண் துவஜஸ்தம்பமாக உள்ளது. வெளிச்சுற்றில் நந்தி மற்றும் பலி பீடம் ஆகியவை உள்ளன. சோழர்களால் இக்கோயில் கட்டப்பட்டது. பின்னர் கி.பி.1123இல் விக்கிரம சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் இக்கோயில் கட்டப்பட்டது. மங்கல விநாயகர், முருகன், பைரவர், லட்சுமி நாராயணர் சன்னதிகள் உள்ளன. இறைவி தனி சன்னதியில் உள்ளார்.

0


திருச்சிற்றம்பலம்


திருச்சிற்றம்பலம்