சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

அரக்கோணத்தை அடுத்த பள்ளூரில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திரிபுரசுந்தரி உடனுறை குகை ஈஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்து, பராமரிப்பில்லாத நிலையில் உள்ளது.

வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ள கிராமம் பள்ளூர், வராகியம்மன் கோயில், பரசுராம ஈஸ்வரர் கோயில், பச்சைவண்ணப் பெருமாள் கோயில், புத்தர் கோயில், சப்த கன்னிகையர் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் உள்ள இவ்வூரின் கிழக்குப் பகுதியில் திரிபுரசுந்தரி உடனுறை குகை ஈஸ்வரர் கோயில் உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்தக் கோயிலுக்கு ஔவையார் வந்து வழிபட்டுச் சென்றதாக கர்ண பரம்பரைச் செய்திகள் கூறுகின்றன. இக்கோயிலில் ஒளவையாரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

தற்போது இக்கோயில் மிகவும் சிதிலமடைந்து, பராமரிப்பில்லாத நிலையில் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் பல்லவ மன்னர்களால் அழகிய கலைநயத்துடன் தஞ்சை பெரிய கோயில் கோபுரம் போன்ற வடிவில் சிறிய அளவில் அழகாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரம் தற்போது பராமரிப்பில்லாத நிலையில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

இக்கோயிலில் உள்ள மற்ற சந்நிதிகளும் செங்கற்கள் பெயர்ந்த நிலையில் விளக்கேற்றப்படாமல் உள்ளன. இக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலின் நிலை கண்டு மனம் வெதும்புகின்றனர். இன்று வரை பள்ளூரைச் சேர்ந்த சோமு குருக்கள் குடும்பத்தினர் இக்கோயிலின் மூலவருக்கு தினமும் விளக்கேற்றி அவ்வப்போது தங்களால் இயன்ற வரை திருவிழாக்களை நடத்தி வருகின்றனர்.

இனியேனும், சைவ சமூகப் பெரியவர்களோ, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையினரோ. இக்கோயிலின் நிலங்களை அனுபவித்து வருபவர்களோ முயற்சி எடுத்து, இந்த சிவத் தலத்தை அனைவரும் வழிபடும் வண்ணம் மேம்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
07.01.2024 அன்று திருமால்பூர், பள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்தரும் திரிபுரசுந்தரி உடனாய அருள்மிகு குகைஈஸ்வரர் திருகோவிலில் 42-வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ செந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன்
சிவ சேகர்
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்


திருச்சிற்றம்பலம்