சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

அண்ணாமலையார் அரப்பணி குழுவினின் அரும்பணி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவில் அமைந்த படூர் ஒரு சிறிய கிராமம். அருகிலுள்ள ஓசூர், அமுதூர், புன்னை மற்றும் மழுவங்கரணை ஆகிய கிராமங்களில் அண்ணாமலையார் அரப்பணி குழுவினர் செய்த உழவாரப்பணிகளைப் பற்றி கேள்விப்பட்டு, படூர் கிராம மக்களும் தங்கள் கிராமத்தில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களின் இழந்த மகிமையை மீட்டெடுக்க அண்ணாமலையார் அரப்பணி குழுவினரை அழைத்துள்ளனர்.
அவர்களின் பெரும் முயற்சியினால் பெருமாள் கோவில் மேடும், முட்புதர்களுக்குள் ஒரு சிறிய சுவரையும் பாழடைந்த நிலையில் காண முடிந்திருக்கிறது. அண்ணாமலையார் அரப்பணி குழுவினர் பார்த்த பிரஸ்னத்தில், சிவன் ஆபத் சகாயேஸ்வரராகவும், அம்பாள் சர்வ மங்களாம்பிகையாகவும் விளங்குவது தெரியவந்தது. இக்கோயிலில் வழிபாடு செய்பவர்கள் அஷ்ட பைரவர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும், தேவப் பிரஸ்னத்தில் தெரிந்துள்ளது. இங்கு பெருமாள் செல்வநாயகப் பெருமாள் என்ற பெயரிலும், தாயார் செல்வ நாயகி தாயார் என்ற பெயரிலும், இருப்பதாக பிரஸ்னம் மேலும் வெளிப்படுத்தியுள்ளது. ஒரு சிறிய கோவிலின் கருங்கல் அடித்தளத்தையும் அதன் மேல் ஒரு செங்கல் அமைப்பைக் காணமுடிந்துள்ளது. பல ஆண்டுகளாக புறக்கணிப்பு மற்றும் இயற்கையின் அழிவுகளின் காரணமாக, ஒரு காலத்தில் சிறப்பாக இருந்த கோயில் சிதிலமடைந்து ஒரு சிறிய சுவரின் ஒரு பகுதியை மட்டுமே விட்டுவைத்திருக்கிறது.
இரண்டடி விட்டம் கொண்ட ஆவுடையார் இருப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது.
இதைத் தொடர்ந்து மற்றொரு கல் கண்டுபிடிக்கப்பட்டது, அது உடைந்த லிங்க பாணத்தின் ஒரு பாகமாக இருக்கலாம் என்று யூகித்தோம்.
இந்த கண்டுபிடிப்பால், எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்று அண்ணாமலையார் அரப்பணி குழுவினர், தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.
மேலும் பலி பீடத்தைக் குறிக்கும் இரண்டு கற்களை கண்டெடுத்தோம்.
இறுதியாக மாலையில் நந்திகேஸ்வரர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. நமது தொண்டர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். நந்தி வெளியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்து ஆவுடையார் முன் வைக்கப்பட்டது. கல்லின் உடைந்த பகுதி தற்காலிகமாக லிங்கபாணமாக வைக்கப்பட்டது. கிராம மக்கள் பால், சந்தனப்பொடி மஞ்சள் பொடி போன்ற அபிஷேக திரவியங்களை நிறைய கொண்டு வந்தனர். அபிஷேகம் மற்றும் பூஜையை மருதாடு ஜெகதீசன் செய்தார். இக்கோயிலின் நந்திகேஸ்வரர் ஸ்ரீ வரதராஜன் அவர்களால், “யோக ரிஷபம்” என்கிற வடிவில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று அண்ணாமலையார் அரப்பணி குழுவினரை தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள்.



திருச்சிற்றம்பலம்