39வது உழவாரப் பணி

அருள்மிகு தாயினும் நல்லாள் உடனாய கலிங்கநாதீஸ்வரர் திருக்கோயில்

இருளஞ்சேரி கிராமம், திருவள்ளுர் மாவட்டம்.

அருள்தரும் தாயினும் நல்லாள் உடனாய அருள்மிகு கலிங்கநாதீஸ்வரர் திருக்கோயில்

இருளஞ்சேரி கிராமம், திருவள்ளுர் மாவட்டம்.

கலியுக கவலை நீக்கும் கலிங்கநாதீஸ்வரர்

கலியுகத்தின் பாவங்கள் நீங்கவும், கலிகால பாதிப்புகள் விலகவும், கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் இருளஞ்சேரி ஸ்ரீ கலிங்கநாதீஸ்வரர்.
ஜெயங்கொண்ட சோழ மண்டல மணவிற்கோட்டத்தில் உள்ள தியாக சமுத்திரநல்லூர் அருகே அமைந்துள்ள ஊர் இருங்களூர் எனப்படும் இருளஞ்சேரி ஆகும். இவ்வூரை இறையாஞ்சேரி என்று திருநாவுக்கரசர் ஊர்தொகைப் பாடலில் பாடியுள்ளார்.
இக்கோயிலில் காணப்படும் எட்டு கல்வெட்டுகள் இதன் தொன்மையை வெளிப்படுத்துகின்றன. இவை 1947 இந்திய தொல்லியல் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இருளஞ்சேரியின் பழைய பெயர் இருங்களூராக இருந்து இறையாஞ்சேரியாக மாறி நாளடைவில் இருளஞ்சேரியாக மாறியிருக்கலாம்.
கி.பி.10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் கண்டறியப்பட்டு இருப்பதால், இது சோழர் காலத்திய கோயில் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
கல்வெட்டு செய்திகள் கி.பி.12 ஆம் நூற்றாண்டில், இக்கோயிலின் ஸ்ரீ வருகபிள்ளையார் சன்னதியை, இருங்களூரைச் சார்ந்த அமர யுத்த கோவன் எனப்படும் திருவிற்கோலமுடையான் என்பவர் கட்டியது தெரியவருகிறது.
இதே போல, இருங்களூரில் வசித்த சிந்தனையுடையாள் என்ற பெண்மணி தன் கணவன் தியாக மேகம் என்பவரின் நினைவாக ஆலயத்திற்கு விளக்கு தானம் வழங்கிய செய்தி தெரியவருகிறது.
இறைவனின் ஆதிகாலப் பெயர் கலியஞ்சீஸ்வர மஹாதேவர் என்பது. இப்பெயரை மண்டபத்தின் மேற்கு பகுதி சுவரில் காணப்படும் கல்வெட்டின் வாயிலாக அறிய முடிகிறது. இக்கல்வெட்டு 18, அக்டோபர் 1237 ல் இராஜராஜதேவன் எனப்படும் மூன்றாம் இராஜராஜன் காலத்தில் 22 ஆம் ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டு உள்ளது.
கலியுகத்திற்கு அஞ்சுவோருக்கு அபயம் தந்தருளும் இறைவன் என்பதால், கலியஞ்சீஸ்வரன் எனப் பெயர் பெற்றார். கலியஞ்சீஸ்வரனே மருவி கலிங்கநாதீஸ்வரனாக அழைக்கப்படுகிறார்.
சனிப்பிரதோஷத்தில் தொடங்கி, தொடர்ந்து ஏழு பிரதோஷங்கள் இறைவனை வழிபடுவோருக்கு ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி, கண்ட சனி, பாதச்சனி, பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளும் அகலும். அத்துடன் கலிகால கஷ்டங்களும் நீங்கி விடும் என்பது அடியார்களின் நம்பிக்கை.

ஸ்ரீ தாயினும் நல்லாள்:

இறைவி தாய்க்கு தாயாக விளங்குபவள். இத்திருப்பெயர் கொண்ட இறைவியை வேறெந்த சிவாலயத்திலும் காண முடியாது என்பது குறிப்படத்தக்கது.

திருக்குளம்:

இக்கோயிலின் எதிரே பிரமாண்ட திருக்குளம் அமைந்துள்ளது. இதுவே சங்கு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. கி.பி.1943 ல் கூவம் ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் படித்துறைகள் மண்ணில் புதைந்து சிதிலமடைந்துள்ளது. புனரமைத்தால் மீண்டும் புது பொலிவு பெரும்.

ஸ்ரீ தேவர்சிங்க ஆதீன திருமடம்:

இவ்வாலயத்தினை ஒட்டி மேற்புறத்தில் ஸ்ரீ தேவர்சிங்க ஆதீன திருமடம் ஒன்றும், அதன் அருகே இம்மடத்தை நிறுவிய முதல் குருவான ஸ்ரீ அழகிய திருச்சிற்றம்பல பரமாச்சரிய ஸ்வாமிகளின் ஜீவ சமாதியும், சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன.
ஸ்வாமிகள் ஒரு வெகுதான்ய வருடம், ஆணித்திங்கள் வளர்பிறை சப்தமி திதி அன்று கபாலம் திறந்து இறையருள் பெற்றவர். இந்த ஆதீனத்தின் வழி வந்த முதலாவது சிதம்பர ஸ்வாமிகள் அருளிய “கலிங்கேசன் பதிற்றுப்பத்து அந்தாதி” இறைவன் திருப்புகழை 101 பாடல்கள் மூலம் வெளிப்படுத்துகிறது. இப்பாடல்களில் சில பாடல்கள் மட்டும் கிடைக்க பெற்றுள்ளன.

ஆலய அமைப்பு:

ஆலயம் சிறிய அளவில் தெற்கு முகமாய் எதிரே திருக்குளத்துடன் அமைந்துள்ளது. இறைவன் கிழக்கு முகமாய் காட்சி தர, இறைவி தென்திசை நோக்கி அருள் வழங்குகிறார். கோபுரத்தின் கீழ்ப்புறத்தில் நான்கு பக்கமும் சிங்கமுக உருவங்களும், நால்வரது சிற்பங்களும் கருங்கல்லில் அமைந்துள்ளன. கலி அஞ்சி அபயம் தந்த நாதர் என்பதால் நவக்கிரக சன்னதிக்கு இங்கு இடமில்லை. கோபுரத்தின் கீழே குபேரன், நடராஜர், ரம்பா, ஊர்வசி போன்ற சிற்பங்களும் கருங்கல்லில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.

நந்தி தேவர்:

இவ்வாலய நந்தி தேவர் மிகவும் சிறப்பானவர். இவரது வலது கண் சூரியன் வடிவத்திலும், இடது கண் சந்திர வடிவத்திலும் அமைந்துள்ளது. இது வேறெங்கும் காண முடியாத சிறப்பு. இவரின் பீடத்தில் காணப்படும் கல்வெட்டின் வாயிலாக இந்த ஆலயம் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது உறுதிப்படுகிறது. இவ்ஆலயத்தின் சிறப்பே பிரதோஷம் தான்.
சோழர் காலத்தில் இருங்களூர் என்றும், தேவார நாயகர் திருநாவுக்கரசர் காலத்தில் இறையாஞ்சேரி என்றும், தற்காலத்தில் இருளஞ்சேரி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூர் இறைவன் மீது திருநாவுக்கரசர் ஊர்த்தொகைப்பாடலில், பல்வேறு தலங்களை பாடி வந்து இறையாஞ்சேரியையும் குறிப்பிடுகிறார். இந்த இறைவனை வழிபட்டால் கயிலைநாதனைக் காணலாம் என்று பாடுகின்றார்.
அழகிய திருச்சிற்றம்பலத்திற்கு அருளியதாலும் இது ஒரு முக்தி தலம். காசிக்கு சமமான ஊர் என்றும் போற்றப்படுகிறது. இதே போல, ஸ்ரீ தேவர்சிங்க ஆதீன மடத்தின் பரம்பரை வழி வந்த முதலாவது சிதம்பர ஸ்வாமிகளின் பதிற்றுப்பத்து அந்தாதி பாடல்களும் இறைவனை புகழ்ந்து பாடுகின்றன.

ஆலய தொடர்புக்கு: குமார் குருக்கள்  கைபேசி எண் – 95789 40718

—————————————————————————————————

அடியேன்

சிவ சேகர் – 9884532288

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்

www.shivaperuman.com

இது வரை நடைபெற்ற உழவாரப்பணிகள்

சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டம்

41வது உழவாரப்பணி – அருள்தரும் ஆனந்தவல்லி உடனாய  அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருகோவிலில்

41வது உழவாரப்பணி – அருள்தரும் ஆனந்தவல்லி உடனாய  அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருகோவிலில்

41வது உழவாரப் பணி அருள்தரும் ஆனந்தவல்லி உடனாய  அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருகோவிலில் காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் கிராமம்அருள்தரும் ஆனந்தவல்லி உடனாய  அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருகோவில்இது வரை நடைபெற்ற உழவாரப்பணிகள் சிவபெருமான்...

கைலாசநாதர் திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம்

கைலாசநாதர் திருக்கோயில், செங்கல்பட்டு மாவட்டம்

40வது உழவாரப் பணி அருள்தரும் திரிபுரசுந்தரி உடனாய  அருள்மிகு கைலாசநாதர் திருகோவில் செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த அடையாளச்சேரி கிராமம்அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அடையாளச்சேரி கிராமம், செங்கல்பட்டு மாவட்டம்.அடையாளச்சேரி...

38th உழவாரப்பணி – திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில் கூவம்

38th உழவாரப்பணி – திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில் கூவம்

திரு விற்கோலம் (கூவம்)  தொண்டை நன்னாட்டுத் திருத்தலம்.  சென்னை - அரக்கோணம் இரயில் பாதையில் உள்ள கடம்பத்தூர் இரயில் நிலையத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவு. அருகில் உள்ள ஊர் திருவள்ளூர். திருவள்ளூரில் இருந்து காஞ்சீபுரம் செல்லும் பேருந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம் வழியாக...

37வது உழவாரப்பணி – அருள்மிகு குந்தீஸ்வரர் திருக்கோயில்

37வது உழவாரப்பணி – அருள்மிகு குந்தீஸ்வரர் திருக்கோயில்

37வது உழவாரப் பணி அருள்மிகு வேதநாயகி சமேத குந்தீஸ்வரர் திருக்கோயில் தர்மாபுரம், மதுராந்தகம் வட்டம். செங்கல்பட்டு மாவட்டம்.அருள்மிகு வேதநாயகி சமேத குந்தீஸ்வரர் திருக்கோயில் தர்மாபுரம், மதுராந்தகம் வட்டம். செங்கல்பட்டு மாவட்டம்.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்...

36வது உழவாரம் – கைலாசநாதேஸ்வரர் – செட்டிபுண்ணியம்

36வது உழவாரம் – கைலாசநாதேஸ்வரர் – செட்டிபுண்ணியம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் 36வது உழவாரம் - கைலாசநாதேஸ்வரர் - செட்டிபுண்ணியம்   நாடும் நகரமும், நற்றிருக் கோயிலும், தேடித் திரிந்து, சிவபெருமான் என்று, பாடுமின், பாடிப் பணிமின், பணிந்தபின், கூடிய, நெஞ்சத்தைக், கோயிலாக் கொள்வனே.   திருச்சிற்றம்பலம் நமது சிவபெருமான்...

34வது உழவாரப்பணி – உத்திரமேரூர் – அழிசூர் அருளாளீஸ்வரர் திருக்கோயில்

34வது உழவாரப்பணி – உத்திரமேரூர் – அழிசூர் அருளாளீஸ்வரர் திருக்கோயில்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🏻சிவ சிவ🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖ 🌷திருச்சிற்றம்பலம்🌷 ➖➖➖➖➖➖➖➖➖ 07.05.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் அழிசூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் அம்புஜகுஜளாம்பாள் சமேத ஸ்ரீ அருளாலீஸ்வரர் திருகோவிலில் 34-வது உழவாரப்பணி செய்ய திருவருள்...

33வது உழவாரப்பணி – சிறுவஞ்சூர் அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் 02.04.2023

33வது உழவாரப்பணி – சிறுவஞ்சூர் அருள்மிகு திருவாலீஸ்வரர் திருக்கோயில் 02.04.2023

சிவ சிவ திருச்சிற்றம்பலம் 🙏🏻சிவ சிவ🙏🏻 ➖➖➖➖➖➖➖➖➖ 🌷திருச்சிற்றம்பலம்🌷 ➖➖➖➖➖➖➖➖➖ 02.04.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் செல்லும் சாலையில் ஒரத்தூர் வழியாக சிறுவஞ்சூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருகோவிலில் 33-வது...

30வது உழவாரம் அருள்மிகு சௌபாக்கியநாயகி சமேத சந்திரமெளளீஸ்வரர் திருக்கோயில் மாமண்டூர் ஒச்சேரி இராணிப்பேட்டை மாவட்டம்

30வது உழவாரம் அருள்மிகு சௌபாக்கியநாயகி சமேத சந்திரமெளளீஸ்வரர் திருக்கோயில் மாமண்டூர் ஒச்சேரி இராணிப்பேட்டை மாவட்டம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் சிவ சிவ திருச்சிற்றம்பலம் வணக்கம் 08.01.2023 ஞாயிறு அன்று இராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தில் அருள்பாலிக்கும் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயம் அருள்மிகு சௌந்தர்யநாயகி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில்...

27வது உழவாரம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

27வது உழவாரம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்

27 ஆம் உழவாரம் அருள்மிகு ஆக்னீஸ்வரர் திருக்கோயில் புகைப்படத் தொகுப்புதிருச்சிற்றம்பலம்-------------------------இன்பமே எந்நாளும் துன்பமில்லை-------------------------சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின்27 ஆவது உழவாரம் அருள்தரும் திரிபுரசுந்தரி...

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் திருகோயில், சிந்தாதரிப்பேட்டை….

அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரர் திருகோயில், சிந்தாதரிப்பேட்டை….

சித்ரா மாதவன் ஆதிபுரீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இடம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருந்த ஜார்ஜ் மோர்டன் பிட் என்பவரால் நிறுவப்பட்டது இந்த ஊர்.  நெசவாளர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்ட  பகுதி "சென்னை...

21வது உழவாரப்பணி – நூம்பல் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

21வது உழவாரப்பணி – நூம்பல் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

திருச்சிற்றம்பலம் சிவபெருமான் திருவருளால் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21 ஆவது உழவாரம் __________________________________ திருவேற்காடு, நூம்மல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில், உழவாரப் பணி...

21 வது உழவாரம் – நூம்பல் அகத்தீஸ்வர் திருக்கோயில் 03.04.2022

21 வது உழவாரம் – நூம்பல் அகத்தீஸ்வர் திருக்கோயில் 03.04.2022

சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 21வது உழவாரப்பணி சென்னை திருவேற்காடு நூம்பல் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் திருகோயிலில் உழவாரப்பணி நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அடியார்கள் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.அடியார்க்கும்...

உழவாரப் பணியில் இணைவதற்கான படிவம்

சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டம் சைவ சமயக் குரவர் நால்வருள் ஒருவர் திருநாவுக்கரசர் சுவாமிகள், “அப்பர்’ என்று அழைத்து அகமகிழ்ந்தவர் ஞானசம்பந்தர் சுவாமிகள் . இவர் ஐந்தெழுத்து படைக்கலத்தை நாவிலும், “உழவாரம்’ என்ற விவசாயக் கருவியைக் கையிலும் கைக்கொண்டவர்.     சமணர்களின்...

Tenth

Tenth

சிவ சிவ திருச்சிற்றம்பலம் அரக்கோணத்தை அடுத்த பள்ளூரில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான திரிபுரசுந்தரி உடனுறை குகை ஈஸ்வரர் திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்து, பராமரிப்பில்லாத நிலையில் உள்ளது. வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ள கிராமம்...

படூர் சிவன் கோவில் ஆபத் சகாயேஸ்வரர்

படூர் சிவன் கோவில் ஆபத் சகாயேஸ்வரர்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் அண்ணாமலையார் அரப்பணி குழுவினின் அரும்பணி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவில் அமைந்த படூர் ஒரு சிறிய கிராமம். அருகிலுள்ள ஓசூர், அமுதூர், புன்னை மற்றும் மழுவங்கரணை ஆகிய கிராமங்களில் அண்ணாமலையார் அரப்பணி குழுவினர் செய்த உழவாரப்பணிகளைப்...

பட்டத்தையும் பதவியையும் வாரி வழங்கும்  அருள்மிகு பரமானந்தவல்லி உடனுறை பட்டமுடீஸ்வரர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், பிச்சிவாக்கம் கிராமம்

பட்டத்தையும் பதவியையும் வாரி வழங்கும்  அருள்மிகு பரமானந்தவல்லி உடனுறை பட்டமுடீஸ்வரர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், பிச்சிவாக்கம் கிராமம்

சிவ சிவ திருச்சிற்றம்பலம் இப்பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் பகைவார்களாலும் போர்களினாலும் பல்வேறு தோல்விகளைச் சந்தித்து வந்தான். சிறந்த சிவனடியரான மன்னனின் கனவில் தோன்றிய இறைவன் தான் இருக்கும் இடத்தினை அடையாளம் காட்டி, அங்கே தனக்கு ஒரு ஆலயம் எழுப்பி வழிபாடுமாறு...