சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டத்தின்
23வது உழவாரம்
அருள்தரும் பராசக்தீஸ்வரி சமேத அருள்மிகு பராசக்தீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் நடைபெறும்.
சென்னை மக்களுக்கு தாகத்தை தணிக்க உதவும் தண்ணீரை தரும் முக்கியமான ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, இந்த செம்பரம்பாக்கம் கிராமத்தில் மிக பழமையான சிவன் கோயில் உள்ளது. அமைதியான ஒரு சூழலில் ஈசன் அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு கோபுரம் இல்லை ஆனால் கோயிலின் கருவறை கோபுரத்தை ஈசனின் லிங்க திருமேனியாய் அமைத்துள்ளார்கள்.
கோயிலுக்கு முன் உள்ள நுழைவு வாயிலை கடந்து உள்ளே சென்றால் வலது புறத்தில் பாலகணபதி சாமி மற்றும் ராகவேந்திரா சாமி இருவருக்கும் சிலைகளை வைத்துள்ளார்கள். கொடி கம்பம் இல்லை , கோயிலின் உள் சென்றால் நந்தி பெருமானை நாம் தரிசிக்கலாம் , பின்பு கருவறையில் ஈசன் சற்று பெரிய திருமேனியுடன் காட்சி தருகிறார் . இவரை வணங்கினால் தொழிலில் நாம் மிக பெரிய வெற்றி அடையலாம் என்று கூறுகிறார்கள் . இடதுபுறத்தில் தாயாருக்கு தனி சன்னதி உள்ளதையும் நாம் காணலாம் . இங்குள்ள தட்சணாமூர்த்தி சிலை பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது .
செல்லும் வழி – சென்னை பெங்களூர் சாலையில் பூந்தமல்லி தாண்டி சென்றால் செம்பரம்பாக்கம் ஊர் வரும் அங்கு இடதுபுறத்தில் இக்கோயிலின் பலகை இருக்கும் அதன் வழியே உள்ளே சுமார் 2 km சென்றால் இக்கோயிலை அடையலாம்.
https://maps.app.goo.gl/LQLKqY9Udf3M7DWNA



Google Map


Sri Parasakthi ishwar shiva Temple
