சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருமழிசை அருகே குத்தம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு திருபுரசுந்தரி சமேத திருப்புராந்தகேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கருவறையின் நுழைவாயில் சுவரில் லிங்கத்தைப் பாதுகாக்கும் பாம்புடன் பசு லிங்கத்தின் மீது பால் சொரிவதைச் சித்தரிக்கும் வேலைப்பாடு உள்ளது. ஒவ்வொரு மாதமும் முதலாவது ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஏதேனும் ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து சுத்தம் செய்யும் பணியை எங்கள் சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தினர் செய்து வருகின்றனர். திருக்கூட்ட பெயர் – சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்- அமைப்பாளர் – சிவ சேகர் கோவிலுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளவர்கள் எங்கள் குழுவில் சேர்ந்து கோவில் சுத்தம் செய்யலாம்.

உழவாரப்பணியில் கலந்து கொள்ள

தொடர்பு கொள்ள வேண்டிய எண் – 9884532288