சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
36வது உழவாரம் – கைலாசநாதேஸ்வரர் – செட்டிபுண்ணியம்
நாடும் நகரமும், நற்றிருக் கோயிலும்,
தேடித் திரிந்து, சிவபெருமான் என்று,
பாடுமின், பாடிப் பணிமின், பணிந்தபின்,
கூடிய, நெஞ்சத்தைக், கோயிலாக் கொள்வனே.
திருச்சிற்றம்பலம்
நமது சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டத்தின் 36 வது மாத உழவாரப்பணியாக சிங்கபெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டியின் எதிர்புர சாலையில் அமைந்துள்ள செட்டிபுண்ணியம் கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்தரும் திரிபுரசுந்தரி சமேத கைலாசநாதேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமான் கருணையினால் சிறப்பாக நடைபெற்றது. அழகிய திருக்கோயில் சுவாமியின் திருநாமம் கைலாசநாதேஸ்வர்ர் அம்பாள் திரிபுரசுந்தரி. செட்டிபுண்ணியம் கிராமத்தில், புகழ்பெற்ற யோக ஹயக்ரீவர் பெருமாள் கோவிலின் அருகில், யாரும் அதிகமாக கவனிக்கப்படாத வகையில் இத்திருக்கோயில் உள்ளது. திரு.ஏழுமலை என்பவர் ஒரு கால பூஜை செய்து வருகிறார். பிரதோச வழிபாடு, சிவராத்திரி, அன்னாபிஷேகம் மற்றும் கார்த்திகை தீபம் போன்ற வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நமது சிவபெருமான் உழவாரத்திருக்கூட்டம், உழவாரப்பணி செய்தது, சிவபெருமான் கருணையே.
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
➖➖➖➖➖➖➖➖➖
கோவில் கூகுள் மேப்
https://goo.gl/maps/5TL1Rzf26FJ6xbcA6
➖➖➖➖➖➖➖➖➖
🙏🏻சிவ சிவ🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖
🌷திருச்சிற்றம்பலம்🌷
➖➖➖➖➖➖➖➖➖
02.07.2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம், செட்டிபுண்ணியம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்தரும் திருபுரசுந்தரி சமேத ஸ்ரீ கைலாசநாதேஸ்வரர் திருகோவிலில் 36 வது உழவாரப்பணி ஈசன் திருவருளால் சிறப்பாக நடைபெற்றது. உழவாரப் பணி செய்த, உதவிய அனைத்து சிவ செந்தங்களின் திருவடிகளை வணங்குகிறேன்
➖➖➖➖➖➖➖➖➖
அடியேன் சிவ சேகர் – 9884532288
சிவபெருமான் உழவாரத் திருக்கூட்டம்
www.shivaperuman.com –
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
























































