சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

அருள்மிகு காமக்ஷி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் திருக்கோயில்

 

நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்

தேடித் திரிந்து சிவபெரு மான்என்று

பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்

கூடிய நெஞ்சத்தைக் கோயிலாக் கொள்வனே.

 

திருச்சிற்றம்பலம்

திருவள்ளூர் மாவட்டம் காரனோடை அருகில் உள்ள எருமை வெட்டி பாளையம் கிராமத்தில் பல்லவர்களால் கட்டப்பட்ட சுமார் 1,800 ஆண்டுகள் பழமையான வர முக்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. காரனோடையில்   இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது

இவ்வூரின் புராண பெயர் மகிஷாசுரமர்த்தனம், இப்பெயர் தமிழில் எருமை வெட்டி பாளையம் என்று அழைக்கப்படுகிறது.

சீதாதேவி அருகிலுள்ள குசஸ்தலை ஆற்றில் நீராட வந்தாள். அங்கு மகிஷாசுரன் அவள் அமைதியைக் குலைத்தான்.இதனால் சீதாதேவி பயந்து ராமரிடம் ஓடிவந்தார்.

மகிஷாசுரன் சிவபெருமானிடம் கடுமையான தவம் செய்து தனக்கு பெண்களால் மட்டுமே மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரம் பெற்றிருந்தான், இதனை உணர்ந்த ராமபிரான் நான்கு திசைகளிலும் நான்கு தர்பை புல்லை வைத்தார். அந்த தர்பைபுல் நான்கு தேவிகளாக உருவெடுத்து மகிஷாசுரனை வதம் செய்தனர். இன்றும், அங்காள பரமேஸ்வரி, பொன்னியம்மன், மூலக்கல் அம்மன், கேகைத்தம்மன் ஆகிய நான்கு தேவிகளும் இந்த கிராமத்தின் காவல் தெய்வங்களாக உள்ளனர். இங்கு மகிஷாசுரன் கொல்லப்பட்டதால் மகிஷாசுரமர்த்தனம் என்று அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்களில் 3,5,7 என்ற ஒற்றைப்படை எண்களில் தான் ராஜகோபுரம் உள்ளது, ஆனால் இத்திருக்கோயியிலில் 4 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும். இக்கோயில் திருக்கள்ளால் கட்டப்பட்டுள்ளது. 16 கால் மண்டபம் முழுவதும் அழகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தமிழ் மாத பங்குனி மற்றும் உத்திரம் நட்சத்திர நாளிலும் சூரியன் நேரடியாக சிவலிங்கத்தின் மீதும், காமாட்சி அம்பாளின் முகத்தின் மீதும் படுவதே இத்தலத்தின் தனிச் சிறப்பு.

கல்யாண கோலமாக கருதப்படும் காமக்ஷி அம்பாள் மற்றும் வரமுத்தீஸ்வரர் இருவரும் கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றனர்,

இக்கோவில் விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் கால பைரவர் தட்சினாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் அருள்பாலித்து வருகின்றனர்.

மேலும்  பக்தர்கள் திருமண தாமதம் நீங்க வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர்.

தாமதமான திருமணங்களுக்கான பரிகார ஸ்தலமாக இந்த இடம் கருதப்படுகிறது.

ஐப்பசி அன்னாபிஷேகம் மார்கழி ஆருத்ரா தரிசனம் பிரதோஷம் கால பைரவருக்கு அஷ்டமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது

இக்கோவிலில் நீண்ட காலமாக திருமணம் தடைபட்டவர்கள்   திருமணம் நடந்து  குழந்தை செல்வம் இல்லாதவர்கள்  வழிபட. பலன்  கிடைக்கிறது 

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய கோவில்.


திருச்சிற்றம்பலம்