0124 – நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

திருக்குறள் 0124
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் அடக்கமுடைமை
குறள் நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
மு.வ உரை தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]