0145 – எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்

திருக்குறள் 0145
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பிறனில் விழையாமை
குறள் எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
மு.வ உரை இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]