0170 – அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்

திருக்குறள் 0170
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் அழுக்காறாமை
குறள் அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
மு.வ உரை பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]