0185 – அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

திருக்குறள் 0185
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் புறங்கூறாமை
குறள் அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
மு.வ உரை அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாததன்மை, ஒருவன் மற்றவனைப் பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால் காணப்படும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]