0251 – தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

திருக்குறள் 0251
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம்  புலான்மறுத்தல்
குறள் தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
மு.வ உரை தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்?.
ஆடியோ [ ]
வீடியோ [ ]