இக்கோயிலின் மூலவர் சித்தி விநாயகர் வேண்டுவதை வேண்டும்படி சித்தி செய்து தரும் விநாயகர். அவரின் அருளும், கீர்த்தியும் பக்தர்களால் மிகவும் அறியப் பெற்று, பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்களை உடனே நிறைவேறுவதால் இவருக்கு சக்தி விநாயகர் என்றும், தானா விநாயகர் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

     சென்னை – 600008, எழும்பூர், எழும்பூர் நெடுஞ்சாலையில் (எழும்பூர் F2 காவல் நிலையம் அருகில்) அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில் பல வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர் காலம் தொட்டு விநாயகப் பெருமானை இங்கு வழிபட்டு வந்திருக்கிறார்கள். இக்கோயில் விஸ்தீரனமான இடத்தில் இருந்துள்ளது. 1913ல் எழும்பூர் காவல் நிலையம் அமைக்க இக்கோவிலின் இடத்தை  அரசுக்கு வழங்கப்பட்டது.

     கோவிலின் நுழைவாயிலில் வலதுபுறம் அரசமரத்து விநாயகரும், நாகவள்ளியும் அரசமரத்தின் கீழ் அமைய பெற்றுள்ளது. இக்கோவிலின் மூர்த்தங்கள் மூலவர் சித்தி விநாயகர், விருட்சம் அரச மரம், நுனா மரம், மற்றும் கல்ஆல் மரம், வலதுபுறம் வீரபத்திரரும், இடதுபுறம் வள்ளி தேவசேனா சமேத முருகரும் மற்றும் முருகரின் தீவிர பக்தரான சிதம்பர சுவாமிகளும் உள்ளார். வடக்கு திசை நோக்கி ஸ்ரீதுர்கா பரமேஸ்வரியும், ஈசான மூலையில் ஆதித்ய நவக்கிரங்களும் அமையப் பெற்றுள்ளது இக்கோயிலின் சிறப்பு.

     ஆலயத்தின் தல விருட்சம் அரசு மரமும், நுனா மரமும். அத்துடன் கல்ஆல் மரமும் மூன்றும் பின்னி பினைந்து பல வருட காலமாக இருந்தன். இந்த மரம் சுமார் 5 பேர் கட்டி அனைக்கும் அளவிற்கு சுற்றளவில் மிகப் பெரிய மரம். அம்மரம் கடந்த 2015ம் ஆண்டு வர்தா புயலின் காரணமாக யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் இன்றி சாலையில் சாய்ந்தது.

     இக்கோயில் 1999ல் பல ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது புதிதாக வள்ளி தேவசேனா சமேத சுப்பரமணிய சுவாமியும் ஆதித்ய நவக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2000-ம் ஆண்டில் சக்தி துர்கா பரமேஸ்வரி பிரதிஷ்டை செய்யப்பட்டு எளியமுறையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

     வருடம் தோறும் கும்பாபிஷேக நாட்களில் கலசாபிஷேகம் சங்காபிஷேகம், பால்குட அபிஷேகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

     கோவிலின் சிறப்பு பூஜைகள் – வருடப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை சோமவாரம் 108 சங்காபிஷேகம், ஆடி பூரம் வளையல் காப்பு, பௌர்ணமி அன்னாபிஷேகம், மற்றும் மாதாந்திர சங்கடஹர சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி பூஜை, சிவராத்திரி ஆகிய பூஜைகள்  நடைபெறுகிறது.

     தற்போது இக்கோயில் கும்பாபிஷேகப் பணி நடைபெற சித்தி விநாயகரிடம் விண்ணப்பம் வைக்கப்பட்டுள்ளது. –

சிவபெருமான்.காம்.