

என் அப்பனே… ஈஸ்வரா உன்னை பார்த்தேன் .
பின்பு நான் பரவசமடைந்தேன்..
நீயோ அற்புதமாய் ..அகிலத்தில்… சதாசிவமாக ..
என் மனதை பறி கொடுத்தேன் நீயன்றோ உயிர்களின் ஜீவன்
எங்கள் இதயத்தில் இறைவன்
உன்னை நான் ஆராதித்தேன்
என் உயிராய் நேசித்தேன்
உன்னை நான் பணிந்தேன்…
பொன்னைத்தான்… பொருளைத்தான் யாசித்தேன் வானம் பார்த்த உந்தன் ஆலய திருப்பணிக்கெனவே
என்பேன் சிறு
பிள்ளை போல் மனம் ஏங்கினேன் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன்
தொட்ட
கைகளால் நான் மலர்ந்தேன் என்றும்
பேரானந்தம் அடைந்தேன்
உள்ளத்தால் வள்ளல் நான் ஆனால்,
நீ ஏழைகளின் தலைவன் இங்கு யாவருக்கும் இறைவன்
எண்ணத்தால் உன்னை தொடர்ந்தேன்
நினைவுகளால் வாருடினேன்
ஓரு கோடி பேர் நெஞ்சில் கொண்டு சேர்த்தேன்..,
சொல்லத்தான் அன்று துடித்தேன் சோர்வுற்றேன் என்று
கொண்ட நாணத்தால் அதை மறைத்தேன்
தென்னவா உன்னை நான் மாலையிட்டு மகிழ்வேன் சிறு குடில் அமைத்து விட்டால்
ஏழை நான் என் செயல் சபையேறுமா உன் அருளால் என்று நிறைவேறுமே…
வேடமணியாத நடிகனானேன் வேடிக்கை பார்க்குது கூட்டம்
இங்கே முதல் நீ பார்வையாளன்
உயிர்த்து எழும் போதெல்லாம் மனதில் சதாசிவம் நிலை பெறக் கண்டேன்
வேதனையை சொல்லத்தான்
உன்னை நான்….சந்தித்தேன்..
வேண்டுவது ஒன்றுமில்லை ஆனால், எந்தன் மனவேதனையும் தீரவில்லை
என்னை நான் கொடுத்தேன் என் செயலுக்கு பொருளென்ன
திருப்பணி நிறைவுற வழியென்ன
யாவர்க்கும் இறைவன் நீயன்றோ
எம் மக்கள் பிழைகளை பொறுத்த தலைவன்
உன்னை நான் சந்தித்தேன்
என் உயிராய் நினைத்தேன்
யாசகமே தவம் என
ஆயிரத்தில் ஒருவர் உதவிடுகையில்.. உந்தன் ஆலய திருப்பணி குடமுழுக்கு நடத்திட வழியேது
உன்னை நான்….சந்தித்தேன்..
கண்ணீர் மல்க மண்றாடினேன்
கருணாகர… கைலாயவாச…
நின்னை சரணடைந்தேன் வருவாயோ… அன்றி தருவாயோ…
யாசிக்கிறேன் உன்னிடமே..,
யாசகன்லட்சுமிபதி
C. Lakshmipathy
A/c No. 21320100032652
IFSC Code : FDRL0002132
Federal Bank, Arakkonam Branch,
Google Pay & Phone No : 9444753444
