0143 – விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

திருக்குறள் 0143
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பிறனில் விழையாமை
குறள் விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.
மு.வ உரை ஐயமில்லாமல் தெளிந்து நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், செத்தவரை விட வேறுபட்டவர் அல்லர்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]