0242 – நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்

திருக்குறள் 0242
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் அருளுடைமை
குறள் நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
மு.வ உரை நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]