0268 – தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

திருக்குறள் 0268
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் துறவறவியல்
அதிகாரம் தவம்
குறள் தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
மு.வ உரை தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.
ஆடியோ [ ]
வீடியோ [ ]