0152 – பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

திருக்குறள் 0152
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பொறையுடைமை
குறள் பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
மு.வ உரை வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]