0236 – தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

திருக்குறள் 0236
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் புகழ்
குறள் தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
மு.வ உரை ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
ஆடியோ [ ]
வீடியோ [ ]