0141 – பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து

திருக்குறள் 0141
குறள் பால் அறத்துப்பால்
குறள் இயல் இல்லறவியல்
அதிகாரம் பிறனில் விழையாமை
குறள் பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
மு.வ உரை பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.
ஆடியோ [ ]
வீடியோ [ ]