முருக நாயனார்

திருப்புகலூரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் முருக நாயனார். இவர் புகலூர் வர்த்தமானீச்சரத் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு நாள்தோறும் காலை நண்பகல் மாலை ஆகிய மூன்று காலங்களிலும் பலவகை நறுமலர் மாலைகளைத் தொடுத்து அணிந்து வழிபடும் இயல்புடையவர். இவருடைய திருமடத்திலே திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தங்கியிருந்தனர். திருஞானசம்பந்தர்க்கு நண்பராகிய முருக நாயனார் திருநல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடைய பிள்ளையார்க்கு நிகழ்ந்த திருமணத்தில் கலந்து கொண்டு அங்குத் தோன்றிய பெரும்சோதியில் கலந்து இறைவன் திருவடிகளைத் அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்