மங்கையர்க்கரசியார்

மணிமுடிச்சோழனின் மகள் மங்கையர்கரசி ஆவார். இயற் பெயர் மானி என்பதாகும். சிவபெருமானை தன் இளமையில் இருந்தே வழிபட்டு ஆனந்தம் அடைந்திருந்தார். கூன் பாண்டிய மன்னனுக்கு மனைவியானார். அவரோ சமணத்தை சார்ந்தவரானார். நாட்டில் அமைதியும் நன்மையும் இல்லாமல் துன்பத்துடன் தீமை நடந்தது.

திருஞான சம்பந்தரை பற்றி அறிந்த மங்கையர்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் அவரை அழைத்து பாண்டிய நாட்டில் ஏற்பட்டுள்ள துயரத்தை போக்கவும் தன் கணவர் கூன் பாண்டியனை சமணத்தில் இருந்து மாற்றவும் சம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரவேண்டினர்.. ஞான சம்பந்த பெருமான் மதுரைக்குவந்து ஆலவாய் பெருமானை பார்க்க விழைகிறார்.

அம்பிகையைக்கூடப்பாடாத சம்பந்தர் அங்கு பாடிய பதிகத்தில் மங்கையர்கரசியரைப்பற்றி இரண்டு வரிகள் பாடினார். வளவர் திருக்கொழுந்து என்ற பாராட்டைப் பெற்றார். கூன் பாண்டியனின் வெப்ப நோயைத் தீர்த்து அவனை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றியவர்.

பாண்டிய நாட்டில் சைவம்தழைக்க பாடுபட்டவர். பல ஆண்டு சைவம் தழைக்கசெய்து இறையடி சேர்ந்தார்.

திருச்சிற்றம்பலம்