சோமாசிமாற நாயனார்

.சோழ நாட்டில் அரிசலாற்றங்கரையில் உள்ள அம்பர் (அம்பல்) என்ற ஊரில் நான்மறை வழியே வேள்வி செய்யும் வேதியர் மரபில் தோன்றியவர் சோமாசிமாறர். வேள்விகள் பல செய்த இவர். சிவனடியார்களுக்கு அன்புடன் அமுதூட்டும் பணியினை ஆர்வமுடன் செய்பவர். திருவைந்தெழுத்து ஓதும் நியமம் பூண்டவர். திருவாரூரை அடைந்து இடையராது போற்றினார். இத்தகைய அன்பின் திறத்தால் சிவலோகத்தை அடைந்து  பேரின்பம் உற்றார்.

திருச்சிற்றம்பலம்