சிறப்புலி நாயனார்

பொன்னி நாட்டில் திருஆக்கூரில் அந்தணர் குலத்திலே தோன்றியவர் சிறப்புலி நாயனார். இவர் சிவனடியார்பால் பேரன்புடையராய் அவர்களை எதிர்கொண்டு வணங்கி இன்மொழி பகர்ந்து திருவமுது செய்வித்து அவர்கள் விரும்புவனவற்றைக் குறைவறக் கொடுத்து மகிழும் சீர்கொண்ட புகழ் வள்ளலாகச் சிறந்து விளங்கினார். இவர் திருவைந்தெழுத்தோதிச் சிவபெருமானைக் குறித்துச் செய்தற்குரிய வேள்விகள் புரிந்து இடையறாப் பேரன்பால் நல்லறங்கள் பல செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்து இன்புற்றார்.

திருச்சிற்றம்பலம்