பொய்யடியமையில்லாத புலவர்

மதுரைத் திருவாலவாயில் நிலைபெற்ற தமிழ்ச் சங்கத்தில் அமர்ந்து பொய்ப்பொருட்டு அடிமைப்படாது மெய்ப்பொருளாகிய சிவபெருமான் திருவடிக்கே உள்ளத்தைச் செலுத்தி அகப்பொருட் செய்யுள்களைப் பாடிய கபிலர் பரணர் நக்கீரர் அவர்களைப் போன்று மெய்பொருளாகிய இறைவனுக்கே புலமைப்பணி புரியும் தமிழ்ப்புலவர்கள் அனைவரும் ஆகிய திருக்கூட்டத்தினர் திருத்தொண்டத் தொகையில் நம்பியாரூரராற் போற்றப்பெற்ற பொய்யடிமையில்லாத புலவர்கள் ஆவர்.

திருச்சிற்றம்பலம்