வாயிலார் நாயனார்

சென்னை மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் தபோதனர் பிறந்தார். வழிபாடு இருவகை. புறவழிபாடு. அகவழிபாடு. அகவழிபாடு இல்லாமல் புறவழிபாடு பயனில்லாதது. அந்தர் யாகம் எனும் அகவழிபாடில்லாத சிவபூசை சிறப்பாகாது.

இவரை வாயிலார் என்றும் கூறுவர். வாயிலார் அகவழிபாட்டிலே ஒன்றி நின்றவர். இறைவனை ஒருபோதும் மறவாமையாகிய மனக் கோவிலில் இருத்தி உணர்வு எனும் விளக்கேறி இடையறாத ஆனந்தத்தில் திளைத்து அன்பு எனும் அமுதை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டார். பல ஆண்டுகள் அகப்பூசை செய்து இறவனை மகிழ்வித்து இறையடி சேர்ந்தார்.

திருச்சிற்றம்பலம்