திருவாரூர் பிறந்தார்கள்

உருவமற்றவராகவும், உருவமுடையாவராகவும் எல்லாப் பொருளுமாகி நின்ற பெருமானும் உமாதேவியாரின் மணவாளருமாகிய சிவபெருமான் மகமகழ்ந்து வீற்றிருக்கும் திருவாரூரில் பிறந்தவர்கள் திருக்கயிலாத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின்  கணங்களேயாவார்கள். ஆகையால் ஐம்பொறிகளையும் அடக்கி அவர்களுடைய திருவடிகளை வணங்கி ஒருமனப்பட்டவர்க்கே உயர்ந்த நன்னெறியாகிய வீடு கட்டுவதாகம். மிக்க தனமுடையவர்களாகவும், முன் செய்த தவப் பயனுடையவர்களாகவும், உலகப் பற்று அற்றவராகவும், சிவகணநாதர்களாகவும் கருதப்படுவாரே திருவாரூர்ப் பிறந்தவர்கள் எனப்படுவர்.

திருச்சிற்றம்பலம்