முழுநீறு பூசிய முனிவர்கள்

சிவபெருமான் அருளிச் செய்த சிவாகமங்களினுள்ளே அகற்பம் என்ற ஒரு வகையை நீக்கி, கற்பம், அநுகற்பம், உபகற்பம் என்ற மூவகை திருநீற்றில் ஒன்றைச் சிறிது கையில் எடுத்து அகமும், புறமும் சுத்தம் உண்டாகும்படி பாவித்து தெற்கில் அத்திர மந்திரத்தினால் தெரிந்த பின்பு திருநீற்றை உத்தூளனமாக வேணும், மூன்று பிரிவுகளாக வேணும், பிறை வடிவமாக வேணும் பூசிக் கொள்ள வேண்டும். சிவசந்நிதி முன்பும், ஓமத்தீயின் முன்பும், குருவின் முன்னிலையிலும் தூய்மையற்ற இடங்களிலும் திருநீற்றை அணியலாகாது. தத்துவநெறி உணர்ந்தவர்கள். நீதி நெறி பிழையாகாதவர்கள் மும்மலங்களையும் அறுத்த முனிவர்கள் முதலியோர் சிவகாம விதிப்படி பெற்ற திருநீற்றை புதிய பாத்திரத்தில் வைத்து சிவபெருமானை வணங்கி திருமேனி முழுவதும் பூசுபவர்கள் முழுநீறு பூசிய முனிவர்கள் ஆவர்.

திருச்சிற்றம்பலம்