அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்கள்

சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களின் நாடாகிய தமிழ் வழங்கும் நாடுகளுக்கு அப்பாலுள்ள நாடுகளில் தோன்றி சிவ வழிபாட்டை மேற்கொண்டும், சிவத்தொண்டு புரிந்தும் சிவபெருமானுடைய திருவடியை அடைந்தவர்களும், திருத்தொண்டர் தொகையிலே சொல்லப்பட்ட திருத் தொண்டர்களாகிய தனியடியார்களின் காலத்திற்கு முன்னும் பின்னும் சிவபெருமான் திருவடிகளைச் சார்ந்தவர்களும் அப்பாலும் அடிசார்ந்தார் ஆவர். அப்பாலுள்ள நாடு என்பது தமிழ்நாடு அல்லாத பல நாடுகள் ஆகும். இந்நாடுகளிலும் சிவனடியைச் சார்ந்த திருத்தொண்டர்கள் உண்டு என்பதாகும்.

திருச்சிற்றம்பலம்